பொன் வேண்டாம் – எமக்குப்
பார் போற்றும் புகழும் வேண்டாம்
வேண்டுவதெல்லாம் ஒன்றே
தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!
கோட்டம் வேண்டாம் – எமக்குக்
கொடி தூக்கிக் கொண்டாடவும் வேண்டாம்
வேண்டுவதெல்லாம் ஒன்றே
தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!
பொருள் வேண்டாம் – எமக்கு
பூமிதனில் குண்டுமணிஇடமும் வேண்டாம்
வேண்டுவதெல்லாம் ஒன்றே
தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!
வரம் வேண்டாம் – எமக்கு
வண்ணமிகு வாழ்வும் வேண்டாம்
வேண்டுவதெல்லாம் ஒன்றே
தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!
ஆக்கம்:
உமாதேவி வீராசாமி

வணக்கம், மிகவும் அருமையான வரிகள் ஆசிரியை. தமிழ் மீது கொண்ட பற்று, பாசம், மரியாதை யாவும் இவ்வரிகள் உணர்த்துகின்றன.
பதிலளிநீக்குதமிழ்தாய்க்கு என்றுமே மரணமில்லை ஆசிரியை... அருமையான வரிகள்
பதிலளிநீக்கு