சனி, 26 மார்ச், 2022

#குறுங்கதை 049 #கண் கெட்ட பின்...

 

கண் விழித்துப் பார்க்கிறேன். அம்மாவின் மடியில் நான். அம்மாவின் கைகளை என் கைக்குள் புதைத்து வைத்துக் கொள்கிறேன். பிடியை இறுக்கமாக்கிக் கொள்கிறேன்.

“ம்மா... என்ன(னை) மன்னிச்சிடுங்கம்மா. எனக்காக நிறைய தியாகம் பண்ணியிருக்கீங்க. நான் அத புரிஞ்சிக்காம உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டேன். ஒரு நல்ல மகனா நடந்துக்க தவறிட்டேன். இனிமே சத்தியமா உங்கள தனியா விட மாட்டேன். உங்கள கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குவேன். என்ன மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க. அப்பதான் என் மனசு ஆறும்!” கண்கள் குளமாக அம்மாவிடம் கெஞ்சுகிறேன். அம்மாவிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அவர் விழிகள் மட்டும் ஏதோ பேசுகின்றன. புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவர் விழியோரங்களில் கண்ணீர் வடிந்து என் முகத்தை நனைக்கின்றது. கண்களை மூடித் திறக்கிறேன்.

      அம்மா போன இடம் தெரியவில்லை. என் அருகில் என் அன்பு மகன். அவன் கனவைக் கொன்று வாழ்க்கையை நரகமாக்கிய என்னை ஆழமாய்ப் பார்க்கிறான். மெதுவாய் எழுந்து அவனைத் தொட முயற்சிக்கிறேன். கைகளில் அகப்படாமல் தள்ளிச் செல்கிறான். எட்டிப் பிடிக்கிறேன். மேலும் தள்ளிச் செல்கிறான். தூர தூரச் சென்று கொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்க முயற்சி  செய்து அலுத்துப் போகிறேன்.  

“அப்பாகிட்ட வாடா! அப்பாவ மன்னிக்க மாட்டீயாடா! தெரியாம செஞ்சிட்டேன். உன் மனச புரிஞ்சிக்காம இருந்திட்டேன். உன் இலட்சியத்த மதிக்காம என் விருப்பத்த உன் மேல திணிச்சிட்டேன். அதுக்குப் பரிகாரமா நான் என்ன செய்யனும்னு சொல்லுடா! இப்பவே செய்றேன்!” அவனிடத்தில் மன்றாடுகிறேன், சிலையாய் நிற்கிறான். அவனைத் தொட்டு விட நெருங்கிச் செல்கிறேன். காற்றில் கரைந்து போகிறான்.

இருள் என்னைச் சூழ்கிறது. பயத்தால் நடுங்குகிறேன். காப்பாற்றச் சொல்லிக் கத்துகிறேன், கதறுகிறேன். உதவுவார் யாருமின்றி கலங்குகிறேன்.

“என்னங்க... ஏன் பயப்படுறீங்க. உங்களுக்கு நான் இருக்கேன். என்கிட்ட வாங்க!” மனைவியின் குரல் ஆறுதல் தருகிறது. அந்த இருட்டில் அவளைத் தேடுகிறேன். கண்களில் தென்படவில்லை. இரண்டடி எடுத்து வைக்க, கால் தடுக்கி கீழே விழுகிறேன். நெற்றிப்பகுதி கல் தரையில் முட்டிக்கொண்டதோ என்னவோ, வலியால் துடிக்கிறேன். நெற்றியைத் தடவிப் பார்க்கிறேன். கையில் பிசுபிசுப்பு. வெளியே இடி மின்னல். உடல் நடுக்கம் அதிகமாகிறது. உடலைக் குறுக்கி அப்படியே கீழே உட்காருகிறேன். இடியும் மின்னலும் நிற்பதாய் இல்லை. மின்னலின் ஒளியில் மனைவியின் கல்லறையில் நிற்பது புரிந்து போனது.

“பானு... எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டே உன்ன கொன்னுட்டேன். நான் மனுசன் ரூபத்தில இருக்கிற அரக்கன் பானு. உன்ன மனுசியா நான் மதிச்சது இல்ல. ஒரு புருஷனா உன்கிட்ட பாசம் காட்டுனது இல்ல.  என்ன(னை) மன்னிச்சிரு பானு. சட்டம் எனக்கு தண்டன கொடுக்காம இருக்கலாம். ஆனா, தினம்தினம் என் மனசாட்சி என்ன கொல்லுது! ப்ளீஸ் பானு, என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு... ப்லீஸ்...!” மனைவியின் கல்லறை மேல் விழுந்து அழுகிறேன். நொடிப்பொழுதில் அவள் கல்லறை புகை மூட்டத்தில் மறைந்து போகிறது. 

தனிமை என்னைப் பயமுறுத்துகிறது. தூரத்தில் யாரோ இருவர். கூர்ந்து பார்க்கிறேன். கைகளில் கயிற்றுடன் வெறிகொண்ட பார்வையோடு அவர்கள் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! என் அழுகுரல் யாருக்காவது கேட்கிறதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...