கடந்த
சில நாட்களாகப் பக்கத்து வீட்டு சிவகாமி அக்கா வீட்டுக்குப் போகவே பயமாக
இருக்கிறது. அந்தப் பெரிய அண்ணன் என்னைப் பார்க்கிற பார்வையும், ஆளில்லாதபோது என்னிடம் நடந்துகொள்ளும் முறையும் அச்சமூட்டுகிறது.
சிறப்புக்
கல்வி வகுப்பிலிருந்து வந்தவுடன் சிவகாமி அக்கா வீடுதான் எனக்கு அடைக்கலம். அம்மா வேலை
விட்டு வரும்வரை அக்காவின் வீட்டில் இருக்க
வேண்டும். இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அந்தப் பெரியண்ணன் விடுமுறையில்
எப்பொழுது வந்தாரோ அன்று முதல் என் சந்தோசமெல்லாம் சுக்குநூறாகிப் போனது. நிம்மதி
இடம் தெரியாமல் காணாமல் போனது. முடிந்தவரை அவர் பார்வையிலிருந்து விலகியிருக்கத்தான்
பார்க்கிறேன். ஆனால், கழுகுப் பார்வையுடன் என்னைச் சுற்றி சுற்றி வரும் அவரை என்னால்
என்ன செய்ய முடியும்?
சிவகாமி அக்கா வீட்டில் இருக்கும் வரை எனக்குப்
பாதுகாப்பு. அவர் உருவம் மறைந்த அடுத்த கணம் பெரிய அண்ணனின் சில்மிசங்கள்
ஆரம்பித்து விடும். அவர் அறைக்கு என்னைக் கொண்டு சென்று என் அங்கங்களை ஒவ்வொன்றாய்த்
தீண்டிப் பார்க்கும் போதெல்லாம் நான் செத்துப் பிழைப்பேன். என் மார்பகங்களை
கைகளால் வருடும்போது விட்டு விடும்படி முரண்டு பிடிப்பேன். கால்களை உதைத்துக் கதறுவேன்.
பிறப்புறுப்பைத் தொட்டு வதம் செய்யும்போது அழுகை பீறிட்டுக்கொண்டு வரும். உரக்கக் கத்துவேன்.
கைகளைப் பின் பக்கமாய் கட்டி, வாயில் துணியைத் திணித்து
விட்டால் இந்த ஊமையின் அழுகை யாருக்குத்தான்
கேட்கும்?
அந்த அண்ணன்
செய்யும் காரியங்களை யாரிடம், எப்படிச் சொல்வது? உடல் அங்கங்களில் வலி ஏற்பட்டு நான் படும் துன்பத்தை அம்மாவிடம் எப்படி விளக்குவது?
வாய் பேச, காது கேட்க முடியாத என்னை வைத்துக் கொண்டு அம்மா
படும் பாட்டை நினைத்து வருந்தாத நாளில்லை. இந்த விசயமும் தெரிந்தால், அம்மா
உடைந்து போய் விடுவார். பதினோரு வயதில் எனக்கு நடப்பதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது.
பிள்ளையாரை வேண்டிக் கொள்கிறேன்.
இதோ இன்றும் வழக்கம்போல்
சிவகாமி அக்கா கடைக்குக் கிளம்பி விட்டார்.
“அக்கா! என்ன(னை) தனியா விட்டுட்டு
போகாதக்கா! பிலீஸ்...!” கண்களால் கெஞ்சுவது சிவகாமி அக்காவுக்குத் தெரியவா போகிறது!
வேட்டைக்குக் காத்திருக்கும் சிங்கமாய்ச் சோபாவில் அந்த அண்ணன்
உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன். உள்ளமெல்லாம் பயம் சூழ்ந்துகொள்கிறது.
“அண்ணே! மலரு வீட்ல
ஒண்டியா இருக்கு. அத தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாத. பாவம் அது! நான் கடைக்குப் போயிட்டு வந்திடுறேன். சொல்றது புரியுதா
இல்லையா?” கைப்பேசியில் வேலையாய் இருப்பதாக நடித்துக்
கொண்டிருக்கும் அண்ணனை அதட்டுகிறார் சிவகாமி அக்கா. வேட்டையாடும் சிங்கத்திடம் அடைக்கலம்
கொடுத்து விட்டு, கதவைத் திறந்து வெளியேறப்
போன அக்காவைப் ஏக்கத்தோடு பார்க்கிறேன்.
“என்னடா...! கொஞ்ச நேரம்.
அக்கா கடைக்குப் போயிட்டு வந்திடுறேன், சரியா! பாய் பாய்” கையசைத்து விடைபெறுகிறார்
சிவகாமி அக்கா.
இன்னும் சில நொடிகளில் பெரிய
அண்ணனின் லீலைகள் அரங்கேற்றம் காணப் போகின்றன. என் உடல் நடுங்கத் தொடங்குகிறது. ஊமையாய், செவிடாய்ப் பிறந்ததற்கு இப்பொழுது வருத்தப்படுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக