“அண்ணே, கோரேங் ஏதும் போடுவீங்களாண்ணே!”
“இல்ல தம்பி! அதெல்லாம் மூனு
மணிக்கு மேலதான்!”
“ஓ, சரிங்கண்ணே! அப்படின்னா...
சைவ சாப்பாடு ஒன்னு!”
“எல்லாம சொந்தம்மாத்தான் போட்டுக்கணும்
தம்பி!”
“சரிங்கண்ணே!”
“அப்பளம் வேணுமா தம்பி?”
“ம்ம்ம் வேணும்ணே”
“சாப்பாடு தட்டு பக்கத்தில பெரிய
டப்பா இருக்கு பாருங்க. அதுக்குள்ள இருக்கு. எடுத்துக்குங்க!”
“ஓ, எடுக்கலாமே! ஊறுகாய், மோர்
மொளகா கிடைக்குமாங்கண்ணே?”
“என்னப்பா இப்படிக் கேட்டுட்ட!
அதோ பாரு... அந்தக் குட்டி டப்பாக்குள்ள இருக்கு!”
“ரசம்?”
“அங்க மூலையில டம்ளர் இருக்கு
பாருங்க. அதுல ஊத்திக்கீங்க!”
“சரிங்கண்ணே!”
“தம்பி! வேறு ஏதும் வேணுமாப்பா?”
“அண்ணே, தண்ணீ ஆர்டர் எடுக்கலையே!”
“தோ... கொஞ்ச நேரம் தம்பி. டேய்
பாண்டி! தம்பிகிட்ட குடிக்க என்ன வேணும்னு கேளு...!”
“லீமாவ் ஐஸ் குராங் மானீஸ்
ஒன்னு!”
“வட பாயாசம் இன்னைக்கு ஸ்பெஷல்.
வேணும்னா சொல்லுங்க தம்பி!”
“வட பாயாசம் இருக்கா? பரவாயில்லையே.
ஒரு வட, பாயாசம். எடுத்திட்டு வாங்கண்ணே!”
“பாயாசம் பான பக்கத்தில் சின்ன
சில்வர் பவுல் இருக்கு பாருங்க. அதுல நீங்களே எடுத்துக்கலாம் தம்பி!”
“எடுத்துக்கலாமே!”
“நல்லா சாப்பிட்டீங்களா தம்பி?”
“ம்ம்ம்... சாப்பிட்டேன். ரொம்ப
நன்றிங்கண்ணே!”
“அந்தப் பிலேட்ட ஏன் கையிலேயே
வச்சிருக்கீங்க தம்பி? மேச மேல வச்சிருங்க! நாங்க எடுத்திடுவோம்”
“என்னண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க.
உங்களுக்கு ஏன் சிரமம். நானே பிலேட்ட கழுவி வச்சிட்டு போயிடுறேன்!”
“தம்பி...!”
“இந்தாங்கண்ணே காசு. போயிட்டு
வரேன்!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக